மாணவர் ஒழுக்கக் கோவை
1.0. ஆரம்பம்
- பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், வாகனங்கள் பாடசாலையை மறைத்து நிற்பதை தவிர்த்தல்
1.2. வருகையும் சுத்தமும்
- மாணவர்கள் 7.20 மணிக்கு முன்னர் பாடசாலைக்கு சமூகமளித்திருக்க வேண்டும்.
- வகுப்பு மற்றும் சூழல்சார் சுத்தப்பகுதிகளுக்குப் பொறுப்பான மாணவ மாணவிகள் 7.10 மணிக்கு முதல் சமூகமளித்து 7.25 இற்கு முன்னர் தமது கடமைகளை நிறைவு செய்தல் வேண்டும்.
- எக்காரணம் கொண்டும் காலைக்கூட்டம் ஆரம்பித்ததன் பின்பு நீர்ப்பாய்ச்சுதல் சுத்தம் செய்தல்இ நடமாடுதல் இடம் பெறக்கூடாது.
- பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முதலாவது மணி 7.20 மணிக்கு ஒலிக்கும் மாணவர்கள் தமது இலக்கப்படி வகுப்பில் தயாராக வேண்டும்.
- ஆரம்ப பிரிவு மாணவர்கள் கணினி அறை ஊடாக வருகை தருதல் வேண்டும்.
2.0. காலைக்கூட்டம்
- காலைக்கூட்டம் 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
- தரம் - 3 தொடக்கம் தரம் - 13 வரையான மாணவர்கள் தொகுத்து வழங்குவார்கள் ( ஒருவாரம் ஆரம்ப பிரிவும் அடுத்து வரும் வாரம் இடைநிலைப் பிரிவும் தொகுத்து வழங்குவார்கள்)
- மாணவர்கள் கதைத்தல்இ சிரித்தல்இ பகிடிபண்ணல்இ என்பவற்றை தவிர்த்து அமைதியாகவும் நேர்த்தியாகவும் நிற்றல்.
- அல் குர்ஆன் வசனங்கள் ஓதப்படும் போதும்இ மொழி பெயர்க்கப்படும் போதும் நடமாடுதல் கதைத்தல் தரவேளைகளில் ஈடுபடல் என்பன கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
- தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் என்பன இசைக்கப்படும் போது நிலையாக நிற்பதுடன் சேர்ந்து பாடுதல் கட்டாயமானதாகும்.
- தேசிய கீதம் - திங்கள் மற்றும் புதன் கிழமை – சிங்கள மொழிமூலம் இசைக்கபபடும்
- செவ்வாய் - மாணவிகள் சிங்கள மொழிமூலம் பாடுதல்
- வியாழன்; - மாணவர்கள் சிங்கள மொழிமூலம் பாடுதல்
- வெள்ளி தமிழ் மொழி மூலம் ஒலிக்கப்படும்.
- பாடசாலை கீதம் திங்கள் மாணவிகள் குழுவாகப் பாடுவார்கள்
- வெள்ளி மாணவர்கள் குழுவாகப் பாடுவார்கள்
- உடற்பயிற்சி செவ்வாய் புதன் வியாழன் ஆகிய நாட்கள் உடற்பயிற்சி நடைபெறும்.
- மாணவர்கள் விருப்பத்தோடு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
- காலைக்கூட்டம் நிறைவடைந்ததன் பின் வரிசையாகவும் அமைதியாகவும் வகுப்பறைக்குச் செல்லல்.
3.0 கற்றல் கற்பித்தல்
- திங்கள் தவிர்ந்த ஏனய நாட்களில் 7.40 மணிக்கு பாடங்கள் ஆரம்பமாகும்
- 7.40 இற்கு பிறகு ஆசிரியர் வருகை தராவிட்டால் வகுப்பறையில் அமைதியாக இருந்து சுயகற்றல் அல்லது வழங்கப்பட்டிருக்கின்ற ஒப்படைச் செயற்பாடுகளில் ஈடுபடல்
- வகுப்பறையில் இருந்து வெளியேறுதல்
- எக்காரணங்கள் கொண்டும் மாணவர்கள் வகுப்பறை வழியைத் தாண்டுதல் கட்டாயமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
- அவசரத் தேவை எனில் (சுகவீனம்) வகுப்புத் தலைவரின் உதவியோடு வகுப்பு ஆசிரியரின் அல்லது உதவி அதிபரின் அல்லது பிரதி அதிபரின் அல்லது அதிபர் ஆகியோரின் அனுமதியோடு பாடப்பதிவுப் புத்தகத்தில் பதிந்து விட்டுச் செல்லல்.
குறிப்பு: ஆரம்ப பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகள் பெற்றோரின் பிரசன்னம் அவசியம்
- பாடசாலைப் படலைப் பொறுப்பாளரிடம் சுநஉழசன இல் எழுதிய அனுமதியைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
- அவசரமற்ற தேவை எனில் (நீர் அருந்துதல்) ஒர் ஆசிரியரின் அனுமதியோடு செல்லல்.
- வகுப்பை விட்டு வெளியில் செல்லும் போது மாணவராயின் தனியாகவும் மாணவியாயின் இருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
4.2 பாடத்திற்காக வெளியேறுதல்
- வெளியேறும் போது வரிசையின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வகுப்பு தலைவர்கள் நிற்பதுடன் மாணவர்கள் தமக்காக வழங்கப்பட்ட இலக்கத்தின் படி நின்று வரிசையாகச் செல்லல். பாடம் நிறைவடைந்ததன் பின்பும் அவ்வாறே மீள வகுப்பறைக்கு திரும்புதல்.
- தொகுதிப்பாடங்களுக்கு பாடத்; தலைவரின் வழிகாட்டலுடன் வரிசையாகச் செல்லல்.
- இந் நேரங்களில் நீர் அருந்துதல்இ வேறுஇடங்களுக்கு திரிதல் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்
- தொகுதிப்பாடத்திற்குரிய ஆசிரியர் பாடசாலைக்கு சமூகமளிக்காத போது உரிய வகுப்பிலிருந்து சுயகற்றல் அல்லது ஒப்படை செயற்பாடுகளில் ஈடுபடல்.
4.3 இடைவேளை
- ஆரம்ப பிரிவக்கு 9.10 – 9.30 மணி வரை நடை பெறும் இந் நேரத்தில் ஓடுதல்
- விளையாடுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
- இடைவேளைக்குரிய மணி ஒலித்தவுடன் றுயளா சுழழஅ செல்லல்இ நீர் அருந்துதல் நிரப்புதல் செல்லல் என்பன தாமதமின்றி நிறைவு செய்யப்படுதல்
- உணவு வாங்கும் போது அணைவரும் வரிசையாக நின்று வாங்குதல்.
- நிறைவு மணி ஒலித்தவுடன் உடனடியாக வகுப்பறைக்கு செல்லல்.
- இடைவேளை நிறைவடைந்து பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிரக்கும் வேளையில் வகுப்புக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- சிற்றண்டிச் சாலையில் உணவு இல்லாமல் போனால் மாணவஇ மாணவிகள் உதவி அதிபரின் உதவியை நாடி தீர்வினை பெற்றுக்கொள்ளல்.
- குறிப்பாக ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான நீர்இ உணவு என்பவற்றை வீட்டில் இருந்து கொண்டு வருதல் சிறப்பானதாகும்.
4.4 பாடசாலை நிறைவு
- ஆரம்ப பிரிவு தரம் 1இ2 மாணவர்களுக்கு 11.45 மணிக்கும் தரம் 3இ4 மாணவர்களுக்கு 1.30 மணிக்கம் தரம் 5 மாணவர்களுக்கு 2.00 மணிக்கும் பாடசாலை நிறைவடையும்.
- இதன் போது வரிசையாக நின்று துஆ ஓதிய பின் படலை வரை வரிசையாக செல்லுதல் வேண்டும்
குறிப்பு : ஆரம்ப பிரிவு மாணவர்கள் கட்டாயம் கணினி அறை வழி ஊடகாவே செல்லல் வேண்டும்
- இடைநிலைப் பரிவு
- பாடசாலை நிறைவு மணி 2 மணிக்கு ஒலிக்கும் மாணவர்கள் அமைதியாக இருப்பதுடன் வரிசையாகச் செல்ல தயாராக வேண்டும்.
- ஒலிபெருக்கியில் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய மாணர்கள் இயங்க வேண்டும்.
- மாணவிகள் முதலில் வெளியேறுவார்கள் வெள்ளிக் கிழமை மாத்திரம் ஆண் மாணவர்கள் முதலில் வெளியேறுவார்கள்.
- படலைவரை வரிசையாகஇ அமைதியாக செல்லல் வேண்டும்.






