அந்-நஜாத் மகா வித்தியாலயம்

வரலாறு

ஆசிரியர் தின விழா

hemas.jpg
img_9525_11zon.jpg

 

தி/கிண்/அந்-நஜாத் மகா வித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா வலயத்தில் 1971.01.01 இல் கிராமத்திலுள்ள தனவந்தரினால’ வழங்கப்பட்ட சிறிய காணித்துண்டில் ஆரம்பிக்கப்பட்டது.இங்கு தரம் 1 – 13 வரையான வகுப்புக்களில் 1163 மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர்.இம்மாணவர்கள் பாடசாலையைச் சூழவுள்ள பின்தங்கிய 08 கிராமங்களைச் சேர்ந்தவர்களாகும்.90% மான மாணவர்கள் பொருளாதார ரீதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற அன்றாடம் கூலித் தொழில் செய்கின்ற குடும்பங்களைச் சேர்;ந்தவர்களாகும்.கடந்த 2014 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலையை அன்டியுள்ள 03 பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதனால் பாடசாலையில் திடீரென மாணவர் தொகை அதிகரிக்கப்படடதுடன்,பாடசாலையின் தரமும் உயர்த்தப்பட்டது.


இப்பாடசாலை தற்பொழுது அரசாங்கத்தின் 600 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் நோக்கம் சகல வசதிகளுடன் கூடிய நகரப்புற பாடசாலைகளைப் போன்று பல கிராமங்களை உள்ளடக்கி சகல வசதிகளும் கொண்ட பாடசாலையாக மாற்றுவதன் மூலம் கிராமப்புர மாணவர்கள் தரமான கல்வி பெறுகின்ற வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதாகும். ஆனால் இப்பாடசாலையின் எதிர்கால நலன்கருதி தற்போதய காணிக்குள் இத்திடட்த்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற வேலைத்திடட்ங்களை அமுல் படுத்துவதில் பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் இப்பாடசாலையின் தற்போதய காணிக்குள் உட்கட்டமைப்பு விரிவுபடுத்துவதற்கும் ,மாணவர்களின் உடற்பயிற்சி திறன்களை வளர்க்க மைதானமும்,மாணவர் விடுதி ,ஆசிரியர் விடுதி,நவீன கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளை அமைப்பதற்கும் எதிர்காலத்தில் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதற்கும் போதியளவான காணியைப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கென வசதியாக பாடசாலையின் கிழக்கு எல்லையுடன் இணைந்த 900 பேர்ச்சஸ் காணி உள்ளது.இதனைக் கொள்வனவு செய்வதனால் எதிர்காலத்தில் கிராமப்புறங்களின் மத்தியிலுள்ள இப்பாடசாலையை அபிவிருத்தி செய்யப்பட்டு கிரமப்புற மாணவர்கள் நகர்ப்புறங்களை பேநாக்கிச் செல்லாது தங்களது பக்கத்திலேயே உள்ள சிறந்த பாடசாலையில் தரமான கல்வியைப் பெறுகின்ற வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.